ஓவியமணி. திரு. சி. கொண்டையராஜு - டி.எஸ்.சுப்பையா அவர்களுக்கு இடையேயான உறவு.
அனைவருக்கும் வணக்கம். நான் டி.எஸ்.பரமு. கோவில்பட்டியில் சாரதா கிராபிக்ஸ் என்ற நிறுவனத்தில். என் தந்தையாரும் ஓவியமணி திரு. சி. கொண்டையராஜு அவர்களின் மூத்த சீடருமான திரு. டி.எஸ். சுப்பையா அவர்களின் ஓவியக் கலையுடன் தற்போதைய நவீன தொழில்நுட்பத் தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். சமீபகாலமாக எனது தந்தையார் திரு.டி.எஸ்.சுப்பையா மற்றும் ஓவியமணி திரு.கொண்டையராஜு அவர்களுக்கு இடையேயான குரு சிஷ்ய உறவு பற்றி பலரும் இடும் பதிவுகள் தொடர்ந்து வருந்தததக்க வகையில் வலம் வருகிறது. ஒரு மகனாகவும், இருவருக்குமான உறவின் பார்வையாளனாகவும் அத்தகைய தவறான பதிவுகளுக்கு பதில் அளிக்கவும், சரியான நிகழ்வுகளை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது. கொண்டையராஜுக்கும் எனது தந்தை சுப்பையாவுக்கும் உள்ள குரு பக்தி தொடர்ந்து பலராலும் மறைக்கப்பட்டு வருகிறது.ஓவியமணி திரு. கொண்டையராஜு அவர்களோடு எனது தந்தை தனது பதினான்கு வயதில் திருநெல்வேலி தொடங்கி இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் பல ஊர்களில் நாடகங்கள் நடத்தி, பின் இறுதியாக கோவில்பட்டி வந்தார். ஆனால் பலர் தங்கள் பதிவுகளில...


Such an artist ❤️
ReplyDelete